இன்று பலருக்கும் குறட்டைவிடும் பழக்கம் இருக்கின்றது.இந்த குறட்டை பாதிப்பில் இருந்து மீள சிறந்த வீட்டு வைத்திய குறிப்பு இங்கு தரப்பட்டுள்ளது.இதை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
குறட்டை வர என்ன காரணம்?
**வயது முதுமை
**சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனை
**மூக்கடைப்பு
**உடல் பருமன்
**தொண்டை சதை வளர்தல்
**உடல் அசதி
குறட்டையை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:
தீர்வு 01:
1)வல்லாரை கீரை – கால் கைப்பிடி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
1.முதலில் கால் கைப்பிடி வல்லாரை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
4.அதன் பின்னர் அரைத்த வல்லாரை சாறை அந்த வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த வல்லாரை பானத்தை காலை நேரத்தில் எழுந்த உடன் பருகினால் குறட்டை வருவது கட்டுப்படும்.
தீர்வு 02:
1)கற்பூரவல்லி இலை – இரண்டு
2)தண்ணீர் – சிறிதளவு
முதலில் இரண்டு கற்பூரவல்லி இலையை கைகளால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
இந்த தண்ணீரில் கற்பூரவல்லி சாறு சேர்த்து பருகினால் குறட்டை பாதிப்பு முற்றிலும் குணமாகும்.இந்த கற்பூரவல்லி பானத்தை பருகுவதால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழியும்.
அதேபோல் இரவு தூங்கும் நேரத்தில் சிறிது தேனை தொண்டையில் படும்படி விட்டு படுத்தால் குறட்டை வராமல் இருக்கும்.