நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? இதை தினமும் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

இன்று பல வகை வகையான ஸ்நாக்ஸ் கடைகளில் விற்கப்படுகிறது.வண்ணமயமான இனிப்பு சுவை நிறைந்த தின்பண்டங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.

இந்த தின்பண்டங்கள் ருசியாக இருந்தாலும் அவை உடலுக்கு எந்த ஒரு நன்மையும் வழங்காது.இந்த தின்பண்டங்கள் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்துவிடும்.இந்த இனிப்பு பொருட்களால் சர்க்கரை நோய்,வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள்,பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இதில் கடலை மிட்டாய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலரும் நனைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதர தின்பண்டங்களை காட்டிலும் கடலை மிட்டாய் சாப்பிடுவது நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தினமும் கடலை மிட்டாய் சாப்பிட்டால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலை மிட்டாய் சர்க்கரை அல்லது வெல்லம் போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.வேர்க்கடலை ஆரோக்கியம் நிறைந்தது என்றாலும் அதில் சேர்க்கப்படும் இனிப்புகளால் சர்க்கரை நோய்,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் போன்றவை ஏற்படக் கூடும்.

தினமும் வேர்க்கடலை மிட்டாய் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துவிடும்.தினமும் வேர்க்கடலை மிட்டாய் சாப்பிட்டு வந்தால் பல் சொத்தையாகிவிடும்.பல் ஆரோக்கியம் சிதைய இந்த மிட்டாய் முக்கிய காரணமாக இருக்கிறது.

அதிகளவு கடலை மிட்டாய் உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகிவிடும்.கடலை மிட்டாய் தயாரிக்க பயன்படுத்தும் வெல்லத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இரத்த கொதிப்பு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.