உங்களுக்கு வயிறு உப்பசம் இருந்தால் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)இஞ்சி – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ளுங்கள்.அதன் பின்னர் இந்த இஞ்சி துண்டுகளை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
2.பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு இடித்த இஞ்சி சாறு சேர்த்து கொதிக்க வையுங்கள்.
3.இஞ்சி பானத்தை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகினால் வயிறு உப்பசம் சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதன் பின்னர் இதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இந்த பானத்தை பருகினால் வயிறு உப்பசம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)இஞ்சி சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.
2.இந்த இஞ்சியை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
3.பிறகு இஞ்சி சாறை அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் வயிறு உப்பசம் குணமாகும்.