நரம்பு தளர்ச்சி குணமாக.. இந்த பொருளை பொடித்து நெயில் கலந்து 7 தினங்கள் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

நரம்பு தளர்ச்சி குணமாக.. இந்த பொருளை பொடித்து நெயில் கலந்து 7 தினங்கள் சாப்பிடுங்கள்!!

Divya

நரம்பு பலவீனத்தால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு தான் நரம்பு தளர்ச்சி.இது தவிர நரம்பு அடிபடல்,நரம்பியல் வலி,வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களாலும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது.

நீங்கள் நீண்ட காலமாக நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் அவதியடைந்து வருகிறீர்கள் என்றால் உடனடியாக இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி பண்ணுங்க.

நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள்:

1)தூக்கமின்மை
2)எரிச்சல்
3)கவனக் குறைவு
4)நடப்பதில் சிரமம்
5)பதட்டம்
6)கை,கால் நடுக்கம்

நரம்பு தளர்ச்சி காரணங்கள்:

1)மன அழுத்தம்
2)பதப்படுத்தப்பட்ட உணவுகள்
3)காஃபின் உணவுகள்
4)ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்
5)மது அருந்துதல் பழக்கம்
6)நோய்கள்
7)உடல் காயங்கள்

முருங்கை பிசினில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?

**பொட்டாசியம் **புரதம் **சுண்ணாம்பு **கால்சியம் **வைட்டமின் ஏ மற்றும் சி **நார்ச்சத்துக்கள் **தாது உப்புக்கள்

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின் – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.கிண்ணம் ஒன்றில் முருங்கை பிசின் – இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.

2.பிறகு இந்த முருங்கை பிசின் நன்றாக ஊறி வந்ததும் அதில் சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம்.இந்த முருங்கை பிசினை சாப்பிட்டு வந்தால் இரத்த போக்கு,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,உடல் மந்தம்,பாலியல் குறைபாடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின் பொடி – ஒரு தேக்கரண்டி
2)நெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி முருங்கை பிசின் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த முருங்கை பிசின் பேஸ்டை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.