நாம் சுவாசிக்க உதவும் நுரையீரலில் தேங்கி இருக்கும் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள கஷாயத்தை செய்து பருகலாம்.நிச்சயம் இந்த கஷாயம் சளியை முழுவதுமாக கரைத்து வெளியேற்றிவிடும்.
நெஞ்சு சளிக்கான காரணங்கள்:
**பருவநிலை மாற்றம்
**இனிப்பு உணவுகள்
**நோய் தொற்று பரவல்
**சைனஸ்
நெஞ்சு சளி அறிகுறிகள்:
**மூச்சுத் திணறல்
**தூக்கமின்மை
**தொண்டை வலி
**தொண்டை கரகரப்பு
நெஞ்சு சளியை கரைக்கும் மூலிகை கஷாயம்:
தேவையான பொருட்கள்:-
1)கற்பூரவல்லி தழை – ஐந்து
2)ஏலக்காய் – ஒன்று
3)இஞ்சி – ஒரு சிறு பீஸ்
4)பூண்டு பற்கள் – நான்கு
5)இலவங்கம் – இரண்டு
6)தேன் – ஒரு தேக்கரண்டி
7)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி
8)சீரகம் – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஐந்து கற்பூரவல்லி தழையை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் மிக்சர் ஜாரில் கற்பூரவல்லி தழை,அரை தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி கருப்பு மிளகு,ஒரு ஏலக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு துண்டு இஞ்சி மற்றும் நான்கு வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் சேர்க்க வேண்டும்.
3.பின்னர் இரண்டு இலவங்கத்தை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த கற்பூரவல்லி கலவையை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.கற்பூரவல்லி கஷாயம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
5.இந்த கஷாயத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஆறவைத்த பிறகு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த கற்பூரவல்லி கஷாயம் சளியை கரைத்து மலத்தில் வெளியேற்றிவிட வேண்டும்.