தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் காலியாக இருக்கக்கூடிய 7783 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கான ஆட்களை நேரடியாக நியமனம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விவரம் :-
அங்கன்வாடி பணியாளர் மற்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பணிக்கு மொத்தமாக 3886 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க கூடியவர்கள் இந்த வேலையில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படக் கூடியவர்களுக்கு, பெரிய அங்கன்வாடி பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் மாதந்தோறும் 7,700 என்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர்களுக்கான தொகுப்பூதியம் 5,700 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வயது வரம்பு 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும் என்றும் கைமை பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உறவுகள் இன்றி தனியே தவிக்க கூடிய பெண்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உதவியாளர் பணிக்கான விவரங்கள் :-
இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதுமென்றும் இதற்கான காலி பணியிடங்கள் 3592 இருப்பதாகவும் இந்த பணிக்கான மாதந்தோறும் தொகுப்பூதியம் 4100 என்றும் ஒரு வருடத்திற்கு பின்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இதற்கான வயது வரம்பு 20 வயது முதல் 40 வயது வரை என்றும் தாழ்த்தப்பட்டவர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் கைமே பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்க்கு 45 வயது தளர்வு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பிக்க இந்த இணையதளத்தை அணுகவும் :-
✓ https://icds.tn.gov.in/
✓ https://icds.tn.gov.in/icdstn