இந்திய அரசாங்கத்தை பொருத்தவரையில் அனைவருக்கும் துப்பாக்கியும் அதற்கான லைசன்ஸ்களும் வழங்கப்பட மாட்டாது. ஒருவருடைய சூழ்நிலை அவருடைய அந்தஸ்து மற்றும் தேவை இருப்பின் மட்டுமே அதற்கான விசாரணைகள் ஆவணங்கள் போன்றவற்றை முறையாக பெற்றுக் கொண்டு அதன் பின்பு தான் துப்பாக்கி காண லைசென்ஸ் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.
துப்பாக்கி காண லைசன்ஸ் பெறுவதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் :-
✓ அடையாள சான்றிதழ்
✓ வருமான வரிச் சான்றிதழ்
✓ இருப்பிட சான்றிதழ்
✓ தொழில் விவரங்கள்
✓ வங்கி கணக்கு அறிக்கை
✓ ஆடிட் அறிக்கை
✓ சொத்துப் பட்டியல்
✓ மனநல சான்றிதழ்
✓ மிரட்டலின் வினா வரையறுக்கப்பட்ட காவல்துறை எஃப்.ஐ.ஆர். நகல் போன்றவை முறையாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களுடன் இந்த சான்றிதழ்களை இணைத்து வழங்கியதுடன் எந்த காரணத்திற்காக விண்ணப்பதாரர் துப்பாக்கியை வைத்துக்கொள்ள விரும்புகிறார் என்றும் இது குறித்த விசாரணைகள் மற்றும் அவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்வர். அதன் பின்பு துப்பாக்கிக்கு லைசன்ஸ் பெற நினைக்கும் விண்ணப்பதாரரின் மீது ஏதேனும் குற்றவியல் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறதா அவர்கள் மீது ஏதேனும் சிவில் புகார்கள் இருக்கிறதா என்பதையும் கண்டறிவர். எந்தவித குற்றங்களும் இல்லாமல் இருக்கக்கூடியவருக்கு லைசன்ஸ் வழங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு வேலை இதில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கிறது என்றால் உடனடியாக அவருக்கு துப்பாக்கி காண உரிமம் மறுக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கூறியபடி ஆவணங்கள் மற்றும் விசாரணைகளை முடித்து துப்பாக்கி காண உரிமம் பெற்றுக் கொண்டவர்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்தல் அவசியம். மேலும் இது போன்ற புதுப்பித்தலுக்கு காவல்துறையின் உடைய நற்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற துப்பாக்கி உரிமத்தை பெறக்கூடியவர் மூன்று துப்பாக்கிகளை வைத்து கொள்ளலாம் என்றும் ஒரு ஆண்டிற்கு 100 தோட்டாக்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாநிலத்தில் வசிக்க கூடியவர் தான் வாங்கிய துப்பாக்கியை மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு கட்டாயமாக எடுத்துச் செல்லவே கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகும் பட்சத்தில் காவல்துறையிடம் அதற்கான சரியான ஆவணங்களை ஒப்படைத்த பின்பு அவர்களின் அனுமதியின் பெயரில் எடுத்த செல்லலாம் என்றும் பல ஆண்டுகள் கழித்து தங்களுடைய துப்பாக்கிகளை முழுவதுமாக ஒப்படைக்க நினைப்பவர்கள் காவல் துறையில் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.