இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது.நம் தாத்தா பாட்டி காலத்தில் 80,90 வயது வரையிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவித்து வந்தனர்.
ஆனால் தற்பொழுது வளர்ச்சி என்ற பெயரில் அயல்நாட்டு உணவுக் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவருகின்றனர்.இது உடல் ஆரோக்கியத்தை பதம் பார்த்து வருகிறது என்பதை யாரும் உணர்வதில்லை.உணவு என்றால் ருசியாக இருக்க வேண்டுமென்று மட்டுமே இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றனர்.
ஆனால் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கம் பின்பற்றினால் நோய் நொடியின்றி வாழலாம் என்பது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை.இன்று பெரும்பாலான மக்கள் தள்ளுவண்டி கடை,ஹோட்டல் உணவுகளை விரும்பி உட்கொள்கின்றனர்.பெரியவர்கள் மட்டுமின்றி தற்பொழுது குழந்தைகளும் கடை உணவுகளையே விரும்பி உட்கொள்கின்றனர்.
கடையில் விற்கப்படும் உணவுகள் பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாதவையாகவே இருக்கிறது.கடைகளில் விற்கப்படும் உணவுகளை தொடர்ந்து வாங்கி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் சீகுலைந்து விடும்.குறிப்பாக வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும்.
செரிமானப் பிரச்சனை,வயிற்று வலி,மலச்சிக்கல்,அல்சர்,வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஹோட்டல் உணவுகளால் ஏற்படுகிறது.இதில் அல்சர் பாதிப்பு ஏற்பட்டால் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.வயிறு,குடல்,வாய்,இரைப்பை போன்ற பகுதியில் அல்சர் புண்கள் உருவாகிறது.
அல்சர் பாதிப்பிற்கான காரணங்கள்:
1)கார உணவுகள்
2)குடிப்பழக்கம்
3)உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுப் பழக்க வழக்கங்கள்
4)உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை
அல்சர் வந்தால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
1)நெஞ்சு பகுதியில் எரிச்சல்
2)புளித்த ஏப்பம்
3)மலம் வெளியேற்றும் பொழுது ஆசனவாய் எரிச்சல்
4)அடிக்கடி மலம் கழிக்கும் நிலை
5)வாய் ஓரத்தில் புண்
6)உடல் எடை குறைதல்
8)வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுதல்
10)வயிற்று ப்பகுதியில் வலி
அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்:
உங்களுக்கு அல்சர் பாதிப்பு இருந்தால் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அல்சர் புண்களை சீக்கிரம் குணப்படுத்த மாதுளை மற்றும் கொய்யா பழத்தை அரைத்து ஜூஸாக செய்து பருகலாம்.
காலை உணவு உட்கொண்ட பிறகு ஒருவேளை மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.அதேபோல் மதிய உணவு உட்கொண்ட பிறகு ஒரு கிளாஸ் கொய்யா ஜூஸ் செய்து பருக வேண்டும்.மாதுளை மற்றும் கொய்யா பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் அல்சர் புண்களை சீக்கிரமாக குணப்படுத்த உதவுகிறது.தினசரி இந்த பழங்களை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.