உங்களுக்கு உடல் வலி இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள்.
உடல் வலி உண்டாக காரணங்கள்:-
**சர்க்கரை நோய்
**உடல் சோர்வு
**தூக்கமின்மை
**காய்ச்சல்
**மன அழுத்தம்
**நிமோனியா
உடல் வலியை குறைக்கும் ஹோம் ரெமிடி:-
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு மிளகு – 50 கிராம்
2)தனியா அதாவது கொத்தமல்லி விதை – 200 கிராம்
3)சதகுப்பை – 50 கிராம்
4)சித்தரத்தை – 50 கிராம்
5)பெருஞ்சீரகம் – 50 கிராம்
6)கருப்பட்டி – ஒரு தேக்கரண்டி
7)தண்ணீர் – 100 மில்லி
செய்முறை விளக்கம்:-
1.முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் 50 கிராம் கருப்பு மிளகு,200 கிராம் கொத்தமல்லி விதை சேர்த்து வறுக்க வேண்டும்.
2.இதனுடன் 50 கிராம் சித்தரத்தை மற்றும் 50 கிராம் சதகுப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் 50 கிராம் பெருஞ்சீரகத்தை போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.
3.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு இந்த பவுடரை ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.
4.அடுத்து அடுப்பில் பாத்திரம வைத்து 100 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அரைத்த கொத்தமல்லி கலவை ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.மிதமான தீயில் இந்த பானத்தை கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி சேர்த்து குடித்தால் உடல் வலி குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கொத்தமல்லி விதை – 50 கிராம்
2)சீரகம் – 25 கிராம்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.அடுப்பில் வாணலி வைத்து 50 கிராம் கொத்தமல்லி விதை மற்றும் 25 கிராம் சீரகத்தை தனி தனியாக கொட்டி வறுக்க வேண்டும்.
2.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 100 அல்லது 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.
4.இந்த பானத்தை வடித்து குடித்தால் உடல் வலி நிமிடத்தில் குணமாகும்.இதுபோன்ற மூலிகை பானம் செய்து பருகி வந்தால் உடல் வலி சீக்கிரம் குணமாகும்.