உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை விஷயம் நல்ல உணவுகள் தான்.ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே நம்மால் சிறு நோய் பாதிப்பில் இருந்து நம்மை எளிதில் காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியம் நிறைந்த உணவு என்ன என்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் எது எந்த உணவுகள் என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.உங்கள் உணவு முறையை
சரியாக பின்பற்றி வர வேண்டும்.கால்சியம்,புரதம்,பொட்டாசியம்,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சிலருக்கு தங்கள் உணவுமுறை பழக்கமே தெரியாமல் இருக்கிறது.என்ன மாதிரியான உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது குறித்த விழிப்புணர்வே மக்களிடம் இல்லை.காலை நேரத்தில் டீ,காபி போன்ற சூடான பானங்கள் பருகுதல்,காலை உணவாக அரிசி சாதம்,இட்லி அல்லது தோசை போன்ற உணவுகள் மதியம் அரிசி சாதம்,இரவு நேரத்தில் ஹோட்டல் உணவு என்பது தான் பெரும்பாலானோரின் உணவு பழக்க வழக்கமாக இருக்கின்றது.
ஆனால் பெரும்பாலானோரின் உணவுப் பழக்க வழக்கம் ஆரோக்கியம் இல்லாத ஒன்றாக தான் இருக்கிறது.உணவே மருந்து என்பது நம் முன்னோர்கள் பழமொழி.ஆனால் தற்பொழுது நாம் உட்கொள்ளும் உணவால் நோய் வாய்ப்பட்டு மருந்து தான் உணவாக திகழ்கிறது.
சிலர் மருந்து,மாத்திரை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.உடலில் பல நோய்களை வைத்துக் கொண்டு வாழ்நாளை கடந்து வருகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கம் தான்.
எனவே மருத்துவர் சொன்ன 30 நாள் ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை நீங்கள் பின்பற்றி வந்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.இதில் உங்களுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவுகள் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு மீதமுள்ள உணவுகளை தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்.
முப்பது நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய 30 வகையான உணவுகள் பட்டியல் இதோ:
1)இளநீர் 2)தேங்காய் துண்டு 3)மோர் 4)கறிவேப்பிலை அல்லது புதினா ஜூஸ்
5)வெந்நீரில் தேன் கலந்து பருகுதல் 6)கம்மங்கூழ் 7)ராகி கூழ் அல்லது கொள்ளு கஞ்சி 8)கீரை வகைகள்
9)பயறு வகைகள் 10)முளைகட்டிய தானியங்கள் 11)மக்காசோளம் 12)நுங்கு 13)கற்றாழை ஜூஸ் 14)பழைய சாதம்
15)பழங்கள் மற்றும் காய்கறிகள் 16)நவதானிய உணவுகள் 17)வாழைத்தண்டு ஜூஸ் 18)வேகவைத்த முட்டை
19)பாகல்,கோவைக்காய் அல்லது சுண்டைக்காய் 20)தேன் நெல்லி அல்லது தேன் அத்தி 21)வெஜ் சாலட்
22)உலர் விதைகள் அல்லது உலர் பழங்கள் 23)வெண் பூசணி ஜூஸ் 24)களி வகைகள் 25)பன்னீர் 26)அசைவ
உணவுகள் 27)நெய் 28)உளுந்து கஞ்சி 29)சுண்டல் உணவுகள் 30)பழச்சாறு