குழந்தைகள் வீட்டில் உள்ள பெற்றோர்களை தவிர தூரத்து உறவினர்கள் அல்லது தெரியாதவர்களிடம் பேசும் பொழுதோ அல்லது பழகும் பொழுதோ அவர்களுக்கு கட்டாயமாக குட் டச் பேட் டச் போன்றவை தெரிந்திருத்தல் அவசியம். யாராவது ஒருவர் குழந்தைகளை தவறான எண்ணத்தோடு தொடுதல் அல்லது சீண்டல்கள் செய்யும் பொழுது குழந்தைகளுக்கு அது அருவருக்கத்தக்க அல்லது அச்சுறுத்தக்க செயலாக தெரியும். இதனை ஒரு சில குழந்தைகள் வெளியில் சொல்ல பயப்படுவர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுடைய ஆரம்பகால கல்வியை பயிலும் பொழுது அவர்களுக்கு குட் டச் பேட் டச் போன்றவை கற்றுக் கொடுத்தால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பெற்றோரை தவிர வேறு யாராவது ஒரு மூன்றாவது மனிதர் குழந்தைகளை பின்னால் இருந்து தொடுதல் தட்டுதல் போன்ற செயல்களை செய்யும் பொழுது அது பேட் டச் என்பது குழந்தைகள் உணர்ந்து கொள்ளும் வகையில் பெற்றோர்கள் புரிய வைத்தல் அவசியம். மேலும், கட்டி அணைக்கும் பொழுது தேவையற்ற இடங்களையும் அதாவது தொடக்கூடாத இடங்களையும் சேர்த்து அணைப்பது பேட் டச் என்பதை புரிய வைத்தல் வேண்டும்.
இதற்காக பள்ளிக்கல்வித்துறை திறப்பில் வருகிற மார்ச் 26 ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடத்த இருப்பதாகவும் இதில், குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியருக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பை நிகழ்த்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.