எல்லை மீறும் அமெரிக்கா!! கிரீன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் வழக்கறிஞர்கள்!!

0
3
America is crossing the border!! Lawyers warn green card holders!!
America is crossing the border!! Lawyers warn green card holders!!

அமெரிக்காவில் முறைகேடாக குடியேறியவர்களை நாடு கடத்தும் படலம் முடிந்த தற்போது அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கக் கூடியவர்களை வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்து அவர்களுடைய கிரீன் கார்டுகளை அவர்களே துறக்கும் வண்ணம் செய்து அவர்களையும் நாடு கடத்தும் படலமானது அரங்கேற தொடங்கியிருக்கிறது.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்காவில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து குடியேறி இருக்கக்கூடிய இந்திய வழக்கறிஞர்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்ற குடியேறி இருக்கக்கூடிய வயதான இந்தியர்களை அழுத்தம் கொடுத்து அவர்களுடைய கிரீன் கார்டுகளை துறக்க செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், இப்படிப்பட்ட வயதான இந்தியர்களை குறி வைத்து விமான நிலையங்களிலேயே இரவு முழுவதும் காவலில் வைத்து அவர்களுக்கு ஒரு விதமான அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அந்த மன அழுத்தத்தால் அவர்கள் அமெரிக்காவில் தங்களுடைய உரிமைகளை துறந்து விட கையெழுத்து தரப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

வயதானவர்கள் மட்டுமல்லாது புதிதாக கிரீன் கார்டு பெற்றவர்களை கூட அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைப்பதாகவும் யாரையாவது இதுபோன்று கட்டாயப்படுத்திய கையெழுத்திட சொன்னால் கையெழுத்து இட வேண்டாம் என்றும் ஒருவேளை கையெழுத்து இட்டு விட்டால் அவர்களை உடனடியாக நாடு கடத்த முடிவு செய்துவிடுவார்கள் என்றும் வழக்கறிஞர்கள் அவர்களை உடனடியாக நாடு கடத்த முடிவு செய்து விடுவார்கள் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் தனி நபரின் உடைய கிரீன் கார்டை ரத்து செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஒருவேளை தனிநபரின் கிரீன் கார்டை ரத்து செய்ய வேண்டும் என்றால் நீதிமன்றத்திற்கு சென்று தான் ரத்து செய்ய முடியும் என்றும் தெரிவித்த வழக்கறிஞர்கள் பயத்தினாலும் அவர்கள் கொடுக்கக்கூடிய அழுத்தத்தினாலும் அவர்கள் கேட்கும் இடத்தில் நாம் கையெழுத்து போடப்படுவதால் நம்முடைய உடமைகள் பணி சொத்து என அனைத்தையும் அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு நாடு கடத்தப்படுவது எளிதான செயலாக மாறிவிடும் என்றும் எனவே கிரீன் கார்டு வைத்திருக்கக் கூடியவர்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் எதிலும் கையெழுத்து மட்டும் போட வேண்டாம் என வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்

Previous articleவட இந்தியர்களின் ஆதிக்கத்தால் வேலை இழக்கும் தமிழர்கள்!! அரசு எடுக்க போகும் முடிவு என்ன!!
Next articleஉங்கள் ஆதார் அட்டையில் செல்போன் எண்ணை மாற்ற வேண்டுமா!! உடனடியாக இதை செய்யுங்கள்!!