திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தங்களுடைய தேர்தல் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும் கோபமடைய செய்துள்ளது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிவித்திருப்பதாவது :-
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என தெரிவித்தவர், 70 வயது நிரம்பியவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அதன் பின்பு 80 வயது நிரம்பியவர்களுக்கு 20% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்வதாகவும் மத்திய அரசினுடைய பரிசீலனையில் குறிப்பிட்டிருக்கக் கூடிய கூடுதல் ஓய்வூதியங்களின் விவரங்கள் பின்வருமாறு :-
✓ 65 வயது நிரம்பியவர்கள் – 5% கூடுதல் ஓய்வூதியம்
✓ 70 வயது நிரம்பியவர்கள் – 10% கூடுதல் ஓய்வூதியம்
✓ 75 வயது நிரம்பியவர்கள் – 15% கூடுதல் ஓய்வூதியம்
✓ 80 வயது நிரம்பியவர்கள் – 20% கூடுதல் ஓய்வூதியம்
என பிரித்து வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பரிசீலனைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை மத்திய அரசின் பரிசீலனை முடிந்து இது நடைமுறைப்படுத்தப்படுமானால் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இது குறித்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறுகையில், பழைய ஓய்வூதியம் குறித்து மத்திய அரசினுடைய பரிசீலனை பாராளுமன்ற நிலை குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தோடு மருத்துவ காப்பீட்டு செலவு முழுவதையும் அரசே ஏற்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.