பல நாட்களாகவே மும்மொழிக் கொள்கை பிரச்சனை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே போர் நடப்பது போல வெடித்த வரம் சூழலில் வைரமுத்து அவர்கள் தன்னுடைய அழகிய கவிதை நடையில் இருமுடி கொள்கையால் தான் தமிழர்கள் தமிழ்நாட்டில் வளர்ந்திருக்கிறார்கள் என்றும் ஏன் மூன்றாம் மொழியினை கற்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து பேசியதோடு தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் கவிதை நடையில் கேள்வி கேட்டிருப்பது மும்மொழி கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்கும் அழகிய நடையாக பார்க்கப்படுகிறது.
சமூக வலைதள பக்கத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கூறியிருப்பதாவது :-
இருமொழிக் கொள்கையால்தான்
தமிழர்கள் தமிழ்நாடில் வளர்ந்திருக்கிறார்கள்
இந்தியாவிலும், உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்
தாய்மொழி கற்றால் அன்னை நாட்டில் வெற்றி
ஆங்கிலம் கற்றால் அகிலத்தில் வெற்றி
இரண்டு பூனைகள் வளர்ப்பவன் பூனைகள் வருவதற்கு கதவில்
இரண்டு ஓட்டைகள் போட்டாலே போதுமானது
அதில் எந்தப் பூனையும் உள்ளே நுழைந்து வரும்
மும்மொழி என்ற மூன்றாம் ஓட்டை எதற்கு?
வடநாட்டு மாணவர்கள் ஒரு மொழியில்
உலகத்தை முடித்துக்கொள்ளத்
தென்னகம் மட்டும் மும்மொழிச்
சுமைதாங்கி மூச்சுவாங்க வேண்டுமா?
தாய்மொழிப் பற்றோடு
தமிழ்நாட்டில் நிமிருங்கள்
அயல்மொழி கற்று அயல்நாட்டில் பரவுங்கள்
இருமொழிக் கொள்கையே போதும்
அகிலம் அதற்குள் அடங்கும்
மூன்றாம் மொழி கற்பது
தேவையின் அடிப்படையில் இருக்கட்டும்
திணிப்பின் அடிப்படையில் வேண்டாம்” என்று பேசினேன்
கையோடு வந்தவர்கள் எல்லாம் கைதட்டினார்கள்
திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அவர்களின் அழைப்பின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசர் வைரமுத்து அவர்கள் இப்படி ஒரு அழகிய கவிதையை அதாவது மும்மொழிக் கொள்கை இல்லாமலேயே தமிழகம் வளர்ந்து வருகிறது என்றும் மூன்றாவது மொழியில் திணிக்க வேண்டுமா என்பது குறித்தும் தன்னுடைய அழகிய கவிதை நடையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசி இருப்பது தமிழகத்திற்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாது மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது.