கிரெடிட் கார்டு கடனை குறைக்க எளிய வழி!! உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ!!

Photo of author

By Gayathri

கிரெடிட் கார்டு கடனை குறைக்க எளிய வழி!! உங்களுக்கான சிறந்த தீர்வு இதோ!!

Gayathri

Simple way to reduce credit card debt!! Here is the best solution for you!!

பொதுவாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக்கூடியவர்கள் மேலும் மேலும் அதிகரிக்க கூடிய கடன்களால் வருத்தம் அடைவது நிகழ்ந்து வருகிறது. அதற்கு மாற்றாக உங்களுடைய கிரெடிட் கார்டுகளில் அதிக கடன் இருக்கும் பொழுது அதனை பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டு முறையில் தேர்வு செய்வது சிறந்த தீர்வை வழங்குவதாக அமையும்.

இதுபோன்ற பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய கிரெடிட் கார்டு கணக்குகளில் உங்களுடைய கடன் வட்டி விகிதமானது வட்டி இல்லாத காலங்களாக மாற்றப்படும். அதிலும் குறிப்பாக சிறந்த கடன் பரிமாற்றத்தை பெறுவதற்கு இது ஒரு முக்கிய வழியாகவும் அமையும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய வட்டி செலுத்தும் அளவானது குறைவதோடு மிக விரைவாகவே உங்களுடைய கடன் தொகையை திருப்பி செலுத்த உதவுவதோடு உதவுவதோடு அதிக அளவிலான பணத்தை நீங்கள் சேமிப்பதற்கு இந்த திட்டம் உங்களுக்கு உதவுகிறது.

பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டு என்பது நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய கிரெடிட் கார்டுகளின் நிலுவைகளை குறைந்த வட்டி விகிதத்தோடு மற்றொரு புதிய கிரெடிட் கார்டுக்கு மாற்றக்கூடிய செயலாகவும் வட்டி இல்லாத புதிய கிரெடிட் கார்டை பெறுவதற்கான வழியாகவும் இருப்பது தான் பேலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டு.

நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய கிரெடிட் கார்டில் அதிக அளவு கடன்களை பெற்று அதற்கு அதிக அளவில் வட்டிகளை செலுத்துகிறீர்கள் என்றால் உடனடியாக உங்களுடைய கிரெடிட் கார்டு வங்கிகளை அனுப்பி பலன்ஸ் பரிமாற்ற கிரெடிட் கார்டாக தற்பொழுது உள்ள கிரெடிட் கார்டை மாற்றிக் கொள்வது உடனடியாக உங்களுடைய வட்டி விகிதத்தை அதாவது கடன் வட்டி விகிதத்தை குறைப்பதாகவும் உங்களுக்கு பணத்தை சேமிப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.