தங்களுடைய வீட்டு தேவைகளுக்காக கடன்கள் அல்லது EMI இல் பொருட்கள் போன்றவற்றை வாங்குபவர்கள் அவர்களுடைய கடன் தொகைகளை திருப்பி செலுத்துவதில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். கடன் தொகையை திரும்ப செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான அபராத தொகையும் அதனோடு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதல் அபராத தொகை சேர்க்கப்படும் பொழுது அந்த கடன் நிலுவைகளை செலுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டு பலரால் இது போன்ற கடன் தொகைகளை திரும்ப செலுத்த முடியாமல் பிரச்சனைகள் சிக்கிக்கொள்கின்றனர்.
குறிப்பிட்ட நேரத்தில் EMI செலுத்தவில்லை என்றால் ஒவ்வொரு வங்கிகளும் அந்த வங்கிகளின் விதிகளுக்கு ஏற்றவாறு அபராதங்களை விதிக்கின்றன. அதை பின்வருமாறு :-
✓ HDFC – 100 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை
✓ Kotak Mahindra – நிலுவைத் தொகையிலிருந்து 8% வசூலிக்கிறது
✓ ICICI – 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை
இப்படி ஒவ்வொரு வங்கிகளுக்கும் அபராத தொகை வேறுபடுகிறது. இது குறித்த நிதி நிபுணர்கள் கூறும்பொழுது சரியான நேரத்தில் தங்களுடைய EMI தொகைகளை செலுத்துவது எதிர்காலத்தில் மீண்டும் கடன் பெற எளிமையாக அமையும் என தெரிவித்திருக்கின்றனர்.
அதிலும் இந்தியன் ரிசர்வ் வங்கி மூலம் தற்பொழுது சில வங்கிகள் இதுபோன்று EMI செலுத்தக்கூடியவர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை பிளாக் செய்து வைத்து அதன் பின் அந்த தொகை செலுத்தப்பட வேண்டிய நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது என்றும் இது வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டமாக அமையும் என்றும் நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கிறது.
EMI தொகையின் அபராதத்திலிருந்து தப்பிக்க மூன்று வழிகள் :-
✓ EMI செலுத்துவதில் நீங்கள் முன்கூட்டியே சிந்திக்க வேண்டும்.
✓ தானியங்கி கட்டணங்களை அமைத்தல் வேண்டும்
✓ EMI தொகைகளை நாட்கள் தவறாமல் செலுத்துவதால் உங்களுடைய கிரிடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கும்
மேற்குறிப்பிட்ட வழிகளை பின்பற்றுவதன் மூலம் எதிர்காலங்களில் எளிமையான வசதியின் மூலம் கடன்களை பெறுதல் நடைபெறும். ஒருவேளை உங்களுடைய வங்கிகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் நேரடியாக உங்களுடைய பிரச்சனைகளை தெரிவிப்பதன் மூலம் அபராத கட்டணங்களில் இருந்து உங்களுக்கு தற்காலிக தள்ளுபடிகள் வழங்கவும் சில வங்கிகளின் விதிமுறைகள் அறிவுறுத்துகிறது.