2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கப்பட்டிருந்த கேள்வி நேரத்தின் பொழுது அதிமுக எம்எல்ஏ தங்கமணி அவர்கள் மனநலம் குன்றிய மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது ஆனால் அவர்களுடைய பெற்றோருக்கு உரிமை தொகை ஏன் வழங்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகையானது வழங்க தொடங்கிய பொழுது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் மாநில அரசினுடைய உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படாது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அனைத்து மகளிர்க்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் அது நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை நினைவு கூறும் விதமாக அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் உறுப்பினர் தங்கமணி அவர்கள் தெரிவித்த விவரத்தின் படி இனி நிச்சயமாக மனநலம் குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமை தொகையானது வழங்கப்படும் என்றும் இது முதலமைச்சர் அளித்த வாக்குறுதி என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமை தொகையாக ரூ.1000 கட்டாயமாக வழங்கப்படும் என்றும் இந்தியாவில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு முன்னோடியாக நம் தமிழகம் தான் விளங்குகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்பொழுது உள்ள நிலவரப்படி 1.14 கோடி பேர் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை மாதந்தோறும் தங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக பெற்று வருகின்றனர் என்ற தகவல்களையும் முன் வைத்திருக்கிறனர்.