நம் அன்றாட வாழ்க்கையில் உணவு அடிப்படை விஷயமாக இருக்கின்றதுகாலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளை உணவை சரியாக உட்கொண்டு வருகின்றோம்.ஆனால் எந்த உணவுகளை எப்பொழுது உட்கொள்ள வேண்டுமென்ற புரிதல் நம்மிடம் இல்லை.
சிலர் காலை நேரத்தில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.சிலர் காலை உணவையே உட்கொள்வதில்லை.இன்னும் சிலர் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை மட்டும் உட்கொள்கின்றனர்.
இன்னும் சிலர் காலை நேரத்தில் அமில உணவுகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.இது வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.காலை நேரத்தில் அமில உணவுகளை உட்கொண்டால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும்.
மூன்றுவேளை உணவுகளில் காலை நேர உணவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.காலையில் புரதம்,கால்சியம்,நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.காலை நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய சில உணவுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
1)காலையில் எழுந்ததும் டீ,காபி போன்ற சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.அதற்கு பதில் வெது வெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து பருக வேண்டும்.
2)பாதாம் புரதம் நிறைந்த உலர் விதையாகும்.இந்த பருப்பை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் தோல் நீக்கிவிட்டு உட்கொண்டால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.
3)பப்பாளி சருமப் பிரச்சனைகள்,மலச்சிக்கல்,வயிறு தெடர்பான பாதிப்புகளை சரி செய்ய பெரிதும் உதவியாக இருக்கிறது.பப்பாளி பழத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகும்.
4)நீர்ச்சத்து நிறைந்து காணப்படும் தர்பூசணி பழத்தை காலை நேரத்தில் உட்கொண்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
5)முளைகட்டப்பட்ட பச்சை பயறு,சுண்டல் போன்ற பயறுகளை காலை நேரத்தில் உட்கொண்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
6)சியா விதைகளை ஊறவைத்து வெறும் வயிற்றில் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
7)காலையில் சூடான உணவிற்கு பதில் பழைய சத்தத்தை சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல்,அல்சர்,வயிறு பிரச்சனைகள் குணமாகும்.