கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்களத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஸ்டார் லைனரின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கேயே தங்கும் அப்படியான நிலை உருவானது.
அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் முயற்சியில் 286 நாட்கள் கழிந்த பின்பு ஒரு வழியாக இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பூமியில் தரை இறங்கி இருக்கின்றனர் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக நாசா அறிவித்திருக்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட நான்கு பெயரை பூமிக்கு அழைத்து வரக்கூடிய முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலமானது அனுப்பப்பட்டது. இந்த டிராகன் மின்கலம் சுனிதா வில்லியம்ஸ் உட்பட மற்றவரையும் பத்திரமாக மீட்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கக்கூடிய கடல் பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் தரையிறக்கிருக்கிறது.
இவர்கள் பத்திரமாக தரையிறங்கியவுடன் அங்கு காத்திருந்த மீட்பு பணியாளர்கள் அவர்களை 30 நிமிடங்களுக்குள் டிராகன் விண்கலத்திலிருந்து மீட்டர் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெற்றிகரமாக சர்வதேச விண்களின் நிலையத்தில் 9 மாதம்களில் கடந்து தற்பொழுது பூமியில் தரையிறங்கி இருக்கக்கூடிய இவர்களுக்கு நிறைய மருத்துவ பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவற்றை முடிந்தவரை சரி செய்வதற்கான முயற்சியில் மருத்துவர்கள் இறங்கி இருப்பதாகவும் நாசா திறப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.