2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலால் வரி குறித்து தகவல்கள் வெளியிடப்படும் பொழுது சட்டசபையில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் ஆண்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2 மதுபான பாட்டில்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.
கலால் வருவாயானது 40,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா அவர்கள் பட்ஜெட் தாக்கலில் தெரிவித்திருக்கிறார். இந்த தொகையானது ஆண்டு இறுதியில் அரசு வசூலிக்க நினைக்கும் 36,500 ரூபாயை விட அதிகம். ஒரு வருடத்திற்கு மூன்று முறை கலால் வரியானது அதிகரிக்கப்படுகிறது என்றும் இது ஏழை மக்களை நேரடியாக தாக்கும் என்றும் நீங்கள் வசூலிக்க நினைக்கும் பணத்தைவிட உங்களுடைய பட்ஜெட்டில் இருக்கக்கூடிய பணம் அதிகமாக இருக்கிறது என்றும் இதை எவ்வாறு சரி செய்வீர்கள் போன்ற கேள்விகளை சீனியர் ஜோடி கிருஷ்ணப்பா எம்எல்ஏ கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஒரு புறம் கலால் வரியை வசூலித்து பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் இலவசம் மின்சாரம் இலவச பேருந்து பயணம் என அனைத்தையும் அரசு வழங்குவதாகவும் ஆனால் ஆண்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியதோடு இனி வாரத்திற்கு இரண்டு முறை இலவச மது பாட்டில்களை வழங்க வேண்டும் என்றும் இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கிருஷ்ணப்பா எம்எல்ஏ கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவர்கள் குடிப்பதால் தான் அரசிற்கு வருமானம் வருகிறது என்றும் இப்படி இருக்கும் சூழலில் அவர்களுக்கு மது பாட்டில்களை இலவசமாக வழங்குவதில் எந்தவித தவறும் இல்லை என்றும் இவர் தெரிவித்து இருப்பது சட்டப்பேரவையில் உள்ள அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா கிருஷ்ணப்பாவை பார்த்த தேர்தலில் வென்று நீங்கள் ஆட்சியை அமைத்த பின்பு இதை நடைமுறைப்படுத்துங்கள் என்று நேரடியாக தெரிவித்திருக்கிறார்.
ஒருபுறம் காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ணா இலவச மது பாட்டில்களை வழங்க வலியுறுத்தும் நிலையில், மற்றொருபுறம் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.