கோடையில் வீசும் வெப்பத்தை தணிக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுவது வழக்கம்.இதில் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துடன் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழமும் தர்பூசணிதான்.இந்த பழத்தில் பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தர்பூசணி பழத்தை சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.நரம்புகளின் வலிமையை அதிகரிக்க தர்பூசணி பழம் சாப்பிடலாம்.
தர்பூசணி ஜூஸ் தாம்பத்தியத்தை ஊக்கப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.இந்த தர்பூசணி பழத்தின் விதையை நெயில் வறுத்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.இதயத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த தர்பூசணி பழம் சாப்பிடலாம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய தர்பூசணி பழம் சாப்பிடலாம்.இந்த தர்பூசணி பழத்தில் இனிப்பு சுவை இயற்கையாகவே அதிகரித்து காணப்படுவதால் இதனை சர்க்கரை நோய் இருப்பவர்கள் உட்கொள்ளலாமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருக்கின்றது.
தர்பூசணி பழம் இனிப்பு சுவை அதிகம் நிறைந்தவைதான் என்றாலும் இதில் கிளைசெமிக் மிகவும் குறைவாகவே இருக்கிறது.ஆகவே சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.இருப்பினும் தர்பூசணி பழத்தில் சர்க்கரை போன்ற இனிப்புகளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தர்பூசணி பழச்சாறை அளவோடு குடிப்பது நல்லது.இந்த பழச்சாறை குடித்த பின்னர் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கவனிக்க வேண்டியது முக்கியம்.முழு பழத்தையும் அரைத்து பருகாமல் சிறிதளவு மட்டும் எடுத்து துண்டுகள் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பருக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.