ஆரோக்கியமான உடலுக்கு எடை மேலாண்மை அவசியமான ஒன்றாகும்.உடல் எடையை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மட்டுமே நோய் பாதிப்புகள் நம் அருகில் நெருங்காமல் இருக்கும்.ஆனால் இக்காலத்தில் ஆண்கள்,பெண்கள் அனைவரும் சந்திக்கும் பெரும் பிரச்சனை உடல் பருமன் தான்.
உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் சேர்வதை தான் உடல் பருமன் என்று சொல்கின்றோம்.உடல் பருமனால் நோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.மாரடைப்பு,சர்க்கரை நோய்,பக்கவாதம்,இரத்தம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு.
ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்வதன் விளைவாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்க்கிறது.இந்த கொழுப்பை குறைக்க கடினமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை.சில சிம்பிள் வழிகளை பின்பற்றி வந்தாலே உடல் எடையை தானாக குறைந்துவிடும்.
1)உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இதனால் அதிகமாக உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் குறையும்.உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.எண்ணெய்,கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
2)காலையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கலோரிகளை எரித்துவிடலாம்.காலையில் எழுந்த உடன் தண்ணீர் பருகி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படிவது கட்டுப்படும்.
3)மாலை 6 மணிக்குள் உணவு சாப்பிட்டுவிட வேண்டும்.நீங்கள் சிறிது சிறிதாக நான்கு அல்லது ஐந்து வேளையாக உணவு உட்கொள்ள வேண்டும்.இரவில் உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.எளிதில் செரிக்க கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
4)தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும்.காலை நேரத்தில் நடப்பதால் உடல் எடை சீக்கிரம் குறையும்.குறிப்பாக உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடந்தால் உடலில் உள்ள கலோரிகள் குறையும்.சாப்பிட்ட பிறகு நடந்தால் உடல் எடை இழப்பு ஏற்படும்.சாப்பிட பிறகு நடந்தால் செரிமானப் பிரச்சனை,சர்க்கரை நோய் பாதிப்புகள் வராமல் இருக்கும்.