முன்பெல்லாம் மாணவர்களிடையே ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே ஆசிரியர்கள் தங்களின் கைகளில் கம்புகளை வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டமானது மாணவர்களை அடிக்க கூடாது என்றும் மீறி அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்காமல் சொல்லி சொல்லி விடுவதால் மாணவர்களுக்கு அதுவே மிகப்பெரிய சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர் கடுமையாகத் திட்டி விட்டாலே அவருடைய கை கால்களை உடைப்பது ஒரு சிலரோ அவர்களை கொலை செய்வதற்கு கூட தயங்காமல் முன் நிற்கின்றனர்.
ஆசிரியர்கள் கம் எடுக்க வேண்டும் என்று ஹை கோர்ட் நீதிபதிகள் பரிந்துரை செய்திருப்பதாவது :-
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனை ஆசிரியர் அடித்துவிட்டார் என்று போலீஸில் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர். இந்த புகார் ஆனது கேரளா ஹைகோர்ட்டுக்கு வழக்காக சென்ற பொழுது இந்த வழக்கினை நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் விசாரித்திருக்கிறார். அப்பொழுது, ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்கியதோடு ஆசிரியர்கள் கைகளில் கம்பெடுக்கவில்லை என்றால் மாணவர்கள் கிரிமினலாக மாற வேண்டி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும் இப்பொழுது இருக்கக்கூடிய ஆசிரியர்களின் நிலையானது மாணவர்கள் ஒழுக்கத்தோடு இல்லை என்றாலோ சரியாக படிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம் தங்கள் மீது கிரிமினல் கேஸ் போடப்பட்டு விடும் என்பதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தால் அங்கு மாணவர்களின் உடைய ஒழுக்கமானது சீர்குலைந்து போய்விடும் என்பதை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
கேரளா ஹை கோர்ட் தரப்பில் கேரளா பள்ளிக்கல்வித்துறைக்கு இது குறித்த அறிவுரைகளை நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.