உடல் வியாதிகளை குணப்படுத்தும் உலர் விதைகள்!! எந்த நோய்க்கு எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்?

Photo of author

By Divya

உடல் வியாதிகளை குணப்படுத்தும் உலர் விதைகள்!! எந்த நோய்க்கு எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்?

Divya

தினமும் உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.உலர் விதைகளில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக் கூடியதாக இருக்கிறது.

உலர் விதைகள்:

முந்திரி
பாதாம்
வால்நட்
வேர்க்கடலை
பிஸ்தா

1)முந்திரி

நார்ச்சத்து,மெக்னீசியம்,பொட்டாசியம்,இரும்பு போன்ற சத்துக்கள் முந்திரி பருப்பில் நிறைந்து காணப்படுகிறது.

தினமும் முந்திரி பருப்பு சாப்பிட்டு வந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.முந்திரி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முந்திரியை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.முந்திரியில் இருக்கின்ற நிறைவுறா கொழுப்பு இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

2)பாதாம் பருப்பு

நார்ச்சத்து,மெக்னீசியம்,வைட்டமின்,கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் பாதாமில் நிறைந்து காணப்படுகிறது.இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.

இதய ஆரோக்கியம் மேம்பட ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடலாம்.எலும்பு பிரச்சனையை சரி செய்ய பாதாம் பருப்பு சாப்பிடலாம்.

3)வால்நட்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீசு,செலினியம்,பாஸ்பரஸ்,புரதம்,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வால்நட்டில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

இந்த வால்நட்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.வால்நட் சாப்பிட்டு வந்தால் மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.வால்நட் சாப்பிட்டு வந்தால் அல்சைமர் நோய் பாதிப்ப வருவதை கட்டுப்படுத்தலாம்.

4)வேர்க்கடலை

நார்ச்சத்து,இரும்பு,மெக்னீசியம்,பாஸ்பரஸ்,கால்சியம்,மாங்கனீசு,பொட்டாசியம்,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் நிறைந்து காணப்படுகிறது.

வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்க வேர்க்கடலை உட்கொள்ளலாம்.உடல் எடையை பராமரிக்க,இதய ஆரோக்கியத்தை காக்க வேர்கடலையை சாப்பிடலாம்.

5)பிஸ்தா

புரதம்,பைபர்,வைட்டமின்கள்,மெக்னீசியம்,பொட்டாசியம்,தாமிரம,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்து காணப்படுகிறது.இந்த பிஸ்தாவை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

மூளை சுறுசுறுப்பாக இயங்க,நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க பிஸ்தாவை சாப்பிடலாம்.இரத்த அழுத்தம்,இதய பாதிப்புகளை குணப்படுத்த பிஸ்தா சாப்பிடலாம்.