மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

Photo of author

By Gayathri

மத்திய அரசு துறையில் வேலை!! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.. ரூ.60,000 வரை சம்பளம்!!

Gayathri

Job in Central Government Department!! 10th Class Pass.. Salary up to Rs.60,000!!

மத்திய அரசுத்துறையான ராஷ்ட்ரிய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்கள் அவற்றிற்கான கல்வி தகுதிகள் உள்ளிட்டவற்றை கீழே காணலாம்.

✓ ஆபரேட்டர் டிரெய்னி (கெமிக்கல்) :-

காலி பணியிடம் – 54
கல்வித் தகுதி – BSc diploma
சம்பள விவரம் – 22,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை

✓ கொதிகலன் ஆபரேட்டர் தரம் III :-

காலிப்பணியிடம் – 03
கல்வித் தகுதி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பள விவரம் – 20,000 ரூபாய் முதல் 55,000 ரூபாய் வரை

✓ Junior Fireman Grade II :-

காலி பணியிடங்கள் – 02
கல்வி தகுதி – 10 ஆம் வகுப்பு பயிற்சி
சம்பள விவரம் – 18,000 ரூபாய் முதல் 42,000 ரூபாய் வரை

✓ செவிலியர் தரம் II :-

காலி பணியிடங்கள் – 01
கல்வித் தகுதி – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் வைப்ரரி, பிஎஸ்சி நர்சிங்
சம்பள விவரம் – 22,000 முதல் 60,000 வரை

✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (கருவி) :-

காலி பணியிடங்கள் – 04
கல்வி தகுதி – பிஎஸ்சி டிப்ளமோ
சம்பள விவரம் – 22,000 முதல் 60,000 ரூபாய் வரை

✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (எலக்ட்ரிக்கல்) :-

காலி பணியிடங்கள் – 02
கல்வித் தகுதி – எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ
சம்பள விவரம் – 22,000 முதல் 60,000 வரை

✓ தொழில்நுட்ப பயிற்சியாளர் (மெக்கானிக்கல்) :-

காலி பணியிடங்கள் – 08
கல்வி தகுதி – மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ
சம்பள விவரம் – 22000 முதல் 60,000 ரூபாய் வரை

விண்ணப்பிக்கும் முறை :-

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க பொது நபர்களுக்கு 700 ரூபாய் விண்ணப்ப கட்டணம் என்றும் எஸ் சி எஸ் டி பெண்கள் மாற்று திறனாளிகள் போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்க மார்ச் 21 தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளங்கள் :-

✓ www.rcfltd.com
✓ https://ibpsonline.ibps.in/rcfdece24/