சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் தேவையற்ற நுழையக் கூடியவர்களை தடுக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 582 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர். இதற்கு முன்னதாக இது போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபாஸ்ட் அவுட் என்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது போல தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முதலில் வந்தவர்களை விட்டுவிட்டு பின்னால் வந்தவர்கள் எப்படியாவது நாம் முன்னால் சென்று விட வேண்டும் என பல்வேறு முறை கேடுகள் நடைபெறுவதாகவும் சார் பதிவாளர் அலுவலகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது அதனை மாற்றி புதிய முறை ஒன்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக இருக்கிறது.
சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படுகிறது என்றால் ஆன்லைனிலேயே அவர்களுடைய பத்திர பதிவிற்கான அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு விடும் என்றும் அதன் பின் அவர்களுக்கு உருக்கிய நேரத்தில் அவர்கள் அதாவது காலை 10 மணிக்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்றால் சரியாக அந்த நேரத்தில் வந்தால் மட்டுமே பத்திர பதிவு என்றும் அந்நேரத்தில் வர தவறிவிட்டால் பின்பு மாலையில் தான் அவர்களுக்கான பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலையில் நேரம் ஒதுக்கப்பட்டவர்கள் காலையில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பத்திர பதிவு செய்ய வரக்கூடியவர்களுக்கு நேரம் குறைவாகவும் மற்றும் அலைச்சலின்றியும் இருக்க உதவும் என்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இது மிகப்பெரிய விஷயமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருக்கக்கூடிய சில சார்பதிவாளர் அலுவலகங்களில் உள் நுழைவு அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் யார் அந்த அட்டையை பெறுகிறார்களோ அவர்கள் மட்டுமே சார் பதிவாளர் அலுவலகங்களுக்குள் நுழைய முடியும் என்றும் தேவையற்றவர்கள் உள்நுழைதலை தடுப்பதற்காக இந்த வழியானது பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.