ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின்!! இதை இப்படி சாப்பிடுவதால் விந்து தரம் மேம்படும்!!

Photo of author

By Divya

ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின்!! இதை இப்படி சாப்பிடுவதால் விந்து தரம் மேம்படும்!!

Divya

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூ,காய்,பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் முருங்கை மரத்தில் இருந்து வெளியேறும் கழிவான முருங்கை பிசினும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

முருங்கை பிசினில் நார்ச்சத்து,சுண்ணாம்புச்சத்து,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ,சி,இரும்பு,புரதம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.முருங்கை பிசின் தற்பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

முருங்கை பிசினில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.வாயுக் கோளாறு நீங்க முருங்கை பிசினை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.சருமப் பிரச்சனைக்கு முருங்கை பிசின் தீர்வாக உள்ளது.

மூட்டு எலும்பின் வலிமையை அதிகரிக்க முருங்கை பிசினை உட்கொள்ளலாம்.முருங்கை பிசின் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை பிசினை பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின் – 100 கிராம்
2)மாட்டு பால் – ஒரு கிளாஸ்
3)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 100 கிராம் முருங்கை பிசினை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரவும்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முருங்கை பிசின் பொடியை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் மாட்டு பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை பிசின் பொடியை அதில் போட்டு காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து காலை,இரவு என்று இரு நேரங்களிலும் குடிக்க வேண்டும்.முருங்கை பிசின் பால் ஆண்மையை பெருக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.விந்து பலத்தை அதிகரிக்க முருங்கை பிசின் பால் செய்து பருகலாம்.

மேலும் விந்து உற்பத்தியை அதிகரிக்க முருங்கை பிசினை தண்ணீரில் ஊறவைத்து ஜெல்லி பதத்திற்கு வந்ததும் சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.