உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயம்!! தினமும் காலையில் இப்படி சாப்பிடுங்க!!

Photo of author

By Divya

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயம்!! தினமும் காலையில் இப்படி சாப்பிடுங்க!!

Divya

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் சின்ன வெங்காயம் அதிகமாக பயன்படுகிறது.நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து சின்ன வெங்காயம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

100 கிராம் அளவு கொண்ட சின்ன வெங்காயத்தில் 3.2 கிராம் நார்ச்சத்து,2.5 கிராம் புரதம்,7.9 கிராம் சர்க்கரை சத்து,334 மில்லி கிராம் பொட்டாசியம்,8 மில்லி கிராம் வைட்டமின் சி,1.2 மில்லி கிராம் இரும்புச்சத்து,12 கிராம் சோடியம்,7.2 கிராம் கலோரி,60 மில்லி கிராம் பாஸ்பரஸ்,0.4 கிராம் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

சின்ன வெங்காயத்தின் மலைக்க வைக்கும் மருத்துவ பலன்கள்:

உடலிலுள்ள புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.சின்ன வெங்காய சாறு பருகினால் உடலில் கழிவுகள் படியாமல் இருக்கும்.

இரத்தத்தில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்க சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.

சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.

வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் குணமாக சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும்.உடல் எலும்புகள் வலிமை அதிகரிக்க சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம்.

சுவாசப் பாதையில் உள்ள கிருமிகள் அழிய சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம்.சின்ன வெங்காயம் சாப்பிட்டால் ஆஸ்துமா பாதிப்பில் இருந்து எளிதில் மீளலாம்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட காலையில் பச்சை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.கண் ஆரோக்கியம் மேம்பட,பல் வலி குணமாக சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.