ஆண்,பெண் அனைவருக்கும் தைராய்டு சுரப்பி இருக்கின்றது.நமது கழுத்துப் பகுதியில் அதாவது முன் பக்கத்தில் இந்த தைராய்டு சுரப்பி உள்ளது.இவை நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை கண்ட்ரோல் செய்யும் ஹார்மோன்களை சுரக்கின்றது.
தைராய்டு சுரப்பியானது இதயம்,மூளை போன்ற உறுப்புகள் இயங்க தேவையான ஹார்மோன்களை சுரக்கிறது.நமது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்கள் குறைவான அல்லது அதிகமான அளவு சுரந்தால் ஹார்மோன் பிரச்சனை உண்டாகிறது.
தைராய்டில் அதிகளவு அளவு சுரந்தால் அவை ஹைப்பர் தைராய்டு பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.அதுவே தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரந்தால் அது ஹைப்போ தைராய்டு பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.
உடலில் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்கள் சுரந்தால் பதட்டம்,தூக்கமின்மை,எடை குறைதல் போன்ற பிரச்சனைகள்ஏற்படும் .
அதுவே தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால் அவை முடி உதிர்தல்,எடை அதிகரிப்பு,தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மருந்து மாத்திரை மூலம் தைராய்டு ஹார்மோன் பாதிப்பை குணப்படுத்த முடியும்.அதேபோல் கதிரியக்க சிகிச்சை செய்வதன் மூலம் தைராய்டு பாதிப்பை குணப்படுத்தலாம்.தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் நமது உணவுகள் மூலம் அதை குணப்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் சில வகை உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.சில உணவுகள் தைராய்டு பாதிப்பை அதிகாமாக்கிவிடும்.
1)அதிக அயோடின் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிக அயோடின் நிறைந்த உணவு பாதிப்பை உண்டாக்கும்.
2)வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3)சோயாவில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.சோயா பால்,சோயா சங்க்ஸ்,சோயா பன்னீர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4)சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
5)காபின் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிஸ்கட்,பாஸ்தா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.