நமது உடலின் வெளிப்புறத்தை மட்டுமின்றி உள் உள்ளுறுப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராமல் இருக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சுவாசிக்க உதவும் நுரையீரலில் சளி,கழிவுகள் தேங்காமல் இருக்க என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை பின்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
1)தானியங்கள்
கோதுமை,தினை,கருப்பு சுண்டல்,பொட்டுக்கடலை,பச்சை பயறு,கை குத்தல் அரிசி,கேழ்வரகு
போன்றவற்றில் வைட்டமின் பி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள கழிவுகள் நீங்கும்.
2)வைட்டமின் சி உணவுகள்
எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களை தினமும் ஜூஸாக சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.
3)பச்சை காய்கறிகள்
புதினா,கொத்தமல்லி,முட்டைகோஸ்,கறிவேப்பிலை,கீரை வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள அழுக்கு கழிவுகள் நீங்கும்.
4)ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள்
மீன்,வால்நட்,பாதாம் பருப்பு மற்றும் உலர் விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.இவற்றை சாப்பிட்டால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
5)பூண்டு
இதில் இருக்கின்ற ஆன்டி பயாடட்டிக் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நுரையீரலில் இருக்கின்ற கழிவுகள் மற்றும் சளி வெளியேற பூண்டு பானம் செய்து பருகலாம்.
6)இஞ்சி
இயற்கையாக அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் இஞ்சியில் தேநீர் செய்து பருகி வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.நுரையீரலில் படிந்துள்ள கழிவுகள் முழுமையாக அகல இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.