உங்களுக்கு தீராத கால் வலி இருந்தால் அதற்கு வீட்டு வைத்தியத்தின் மூலம் உரிய தீர்வு காண வேண்டும்.கால் தசை பிடிப்பு,சர்க்கரை நோய்,நரம்பு அடைப்பு,கால்சியம் குறைபாடு,வயது முதுமை காரணங்களால் கால் வலி,வீக்கம் ஏற்படுகிறது.
தீர்வு 01:
மஞ்சள் தூள்
பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.சிறிது மஞ்சள் தூளை அதில் போட்டு காலை வைத்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.
அதன் பிறகு கால்களுக்கு இதமான மசாஜ் கொடுக்க வேண்டும்.இப்படி செய்தால் கால் பகுதியில் ஏற்பட்ட வலி குறையும்.
தீர்வு 02:
கல் உப்பு
பாத்திரத்தில் சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் சிறிது கல் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து கால்களை அதில் வைத்து அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.
இப்படி செய்தால் கால் வலி,கால் வீக்கம் குறைவதோடு இனி இந்த பிரச்சனை வராமல் இருக்கும்.
தீர்வு 03:
வைட்டமின் சி பானம்
எலுமிச்சை,ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களை ஜூஸாக குடித்து வந்தால் கால் வலி குறையும்.
தீர்வு 04:
சூடு தண்ணீர்
ஒரு கப்பில் சூடு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் காட்டன் துணியை போட்டு
ஊறவைக்க வேண்டும்.இதை பிழிந்து கால் வீக்கம்,வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் நிரந்தர பலன் கிடைக்கும்.
தீர்வு 05:
ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கால்களை அதில் ஊறவைக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் கால் வலி காணாமல் போகும்.
தீர்வு 06:
அரிசி ஒத்தடம்
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கால் கைப்பிடி அரிசி போட்டு சிறிது நேரம் வறுக்க வேண்டும்.பிறகு இதை காட்டன் துணியில் கொட்டி முடிந்து கால் பகுதியில் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.