OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

Photo of author

By Divya

OCD என்றால் என்ன? ஓசிடி ஆபாத்தானதா? இதன் அறிகுறிகள் மற்றும் காரணங்கள்!!

Divya

உங்களில் பலர் OCD அதாவது Obsessive Compulsive Disorder என்ற பழக்கம் அதிகமாக இருக்கும்.இந்த OCD சாதாரண விஷயமாக இருந்தால்பிரச்சனை இல்லை.ஆனால் OCD தீவிரமாக இருந்தால் நிச்சயம் அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

OCD ஒரு மன நலன் சார்ந்த விஷயமாகும்.இந்த பிரச்சனை இருபவர்களால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.சிலர் அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவிக் கொண்டே இருப்பவர்கள்.சுத்தமாக இருப்பது முக்கியம்.ஆனால் அதீத சுத்தத்தை கடைபிடிப்பவர்களுக்கு OCD பிரச்சனை இருக்கும்.

எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயம் சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும்.இல்லாத விஷயங்கள் மற்றும் தேவையில்லாத விஷயங்களை பற்றி அதிகமாக யோசித்து மனதை குழப்பிக் கொள்வார்கள்.தேவையற்ற எண்ணங்கள் மனதில் அதிகமாக ஊடுருவினால் நிச்சயம் அது கவலை மற்றும் பயத்தை அதிகமாக்கிவிடும்.

OCD அறிகுறிகள்:

கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகள்

அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவுதல்

பொருட்களை அடிக்கடி ஒழுங்கமைத்தல்

அதீத சுத்தம்

OCD காரணங்கள்:

குடும்ப வரலாறு

மன அழுத்தம் அதிகமாதல்

மூளை செயல்பாட்டில் மாற்றம்

உங்கள் பெற்றோருக்கு OCD பிரச்சனை இருந்தால் உங்களுக்கும் இந்த பாதிப்பு வரலாம்.சுத்தமாக இருப்பது நல்ல விஷயம்.ஆனால் அதீத சுத்தமாக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.நம் மனதில் தேவையில்லாத சிந்தனைகளை உருவாக்கி அதை பற்றியே எந்நேரமும் சிந்தித்து மன அழுத்தத்தை உண்டாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

உங்களுக்கு OCD பாதிப்பு இருந்தால் நீங்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவரிடம் பிரச்சனைகளை விளக்கி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.