நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

நரம்பு தொடர்பான எல்லா பிரச்சனைகளும் குணமான இந்த 3 பொருளை பொடித்து சாப்பிடுங்கள்!!

Divya

உங்களுக்கு நரம்பு பிரச்சனைகள் இருந்தால் கடுமையான உடல் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.நரம்புகளில் அடிபடுதல்,வயது மூப்பு,குடிப்பழக்கம் போன்ற காரணங்களால் அவதியடைந்து வருபவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வை பின்பற்றலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)கேழ்வரகு – 50 கிராம்
2)வெந்தயம் – 20 கிராம்
3)பச்சை பயறு – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் கேழ்வரகு 50 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன்
பிறகு 20 கிராம் வெந்தயம் மற்றும் 50 கிராம் பச்சை பயறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இவை மூன்றையும் கிண்ணத்தில் போட்டு ஊறவைத்து காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்ட வேண்டும்.பின்னர் இதை நிழலில் காய வைத்து பவுடராக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பவுடர் 10 கிராம் அளவிற்கு போட்டு சிறிது நேரம் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடித்து குடித்து வந்தால் நரம்புகள் பலம் அதிகரிக்கும்.நரம்பு இரும்பு போன்று வலிமைபெற,நரம்பு தளர்ச்சி,நரம்பு சுருட்டல் போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க இந்த பானத்தை பருக வேண்டும்.கேழ்வரகிற்கு பதில் கம்பு,சோளம் போன்ற சிறு தானியங்களை பயன்படுத்தலாம்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை அதில் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்க வேண்டும்.இந்த இஞ்சி பானத்தை பருக வேண்டும்.இந்த பானம் நரம்பு வலிமையை அதிகரிக்க செய்யும்.