உடலில் இரத்தம் வேகமாக ஊற.. 10 உலர் திராட்சையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்!!

0
13

நமது உடல் இயக்கத்திற்கு முக்கிய காரணமாக இரத்தம் இருக்கின்றது.இந்த இரத்தம் குறைந்தால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைதல்,உடல் சோர்வு,மயக்கம்,உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே உடலில் இரத்தம் அதிகரிக்க உலர் திராட்சை,தேன் போன்றவற்றை கொண்டு பானம் செய்து குடிக்கலாம்.

இரத்தம் ஊற குடிக்க வேண்டிய பானங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உலர் திராட்சை – 10
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் பத்து கருப்பு உலர் திராட்சை பழத்தை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.

2.அடுத்து மிக்சர் ஜாரில் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சை போட்டு ஊறவைத்த தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த உலர் திராட்சை பேஸ்ட்டில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்.

தேவையான பொருட்கள்:-

1)பீட்ரூட் – ஒன்று
2)கருப்பு உலர் திராட்சை – 10
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஒரு கிண்ணத்தில் பத்து கருப்பு உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி மண் தூசி இன்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு மிக்சர் ஜாரில் பீட்ரூட் துண்டுகள் மற்றும் உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் சேர்த்து பருகினால் இரத்தம் ஊறும்.

அதேபோல் ஆப்பிள்,பீட்ரூட் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால் உடலில் வேகமாக இரத்தம் ஊறும்.இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஊரும்.

மாதுளம் பழச்சாறு,அத்திப்பழ சாறு செய்து குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

Previous articleகுடல் புண்ணை குணமாக்கும் மேஜிக் பானம்!! சீரகம் மற்றும் ஓமத்துடன் இதை சேருங்கள்!!
Next articleஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?