ஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

Photo of author

By Divya

ஒரு நாளைக்கு இரண்டு பேரிச்சம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

Divya

[4:04 pm, 4/4/2025] 🖊️: உலர் பழம் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது பேரிச்சம் பழம்தான்.இது பாலைவன பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுகிறது.இந்த பேரிச்சம் பழத்தில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரிச்சம் பழம் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய ஒரு உலர் பழமாகும்.

இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு அதிகமாக நாம் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.தினமும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட்டுவிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை குணமாகும்.இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் நீங்கி இரத்தம் தூய்மையாக பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.மூளையின் செயல்திறன் மேம்பட தினமும் பேரிச்சம் பழ பால் பருகலாம்.

கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைக்க பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம்.பேரிச்சம் பழத்தில் இருக்கின்ற வைட்டமின் கே குழந்தைகளின் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் முழுமையாக குணமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம்.பேரிச்சம் பழத்தை அரைத்து சூடான பசும் பாலில் கலந்து குடித்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க பேரிச்சம் பழத்தை உட்கொள்ளலாம்.

மூட்டு பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்க பேரிச்சம் பழத்தில் மில்க் ஷேக் செய்து குடிக்கலாம்.தசைகள் வலிமைபெற பேரிச்சம் பழத்தை அரைத்து வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

முதுகு வலி,இடுப்பு வலி,கால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு பேரிச்சம் பழம் சிறந்த தீர்வாக இருக்கிறது.இரத்த சோகை குணமாக பேரிச்சம் பழம் சாப்பிடலாம்.