வெயில் காலத்தில் உடல் சூடு பிரச்சனை ஏற்படுவது இயல்பான விஷயமாக உள்ளது.கடுமையான வெயிலால் உடல் சூடாகி தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,சிறுநீர் கழிப்பதில் சிரமம்,வயிறு எரிச்சல்,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் அதிகாமாக ஏற்படுகிறது.
இந்த வெயில் கால பாதிப்பை ஒரு கப் மோர் குடித்து குணமாக்கி கொள்ளலாம்.இந்த மோரில் கால்சியம்,நல்ல கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த மோரில் வெந்தயம்,கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து குடித்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)மோர் – ஒரு கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் அரை கப் கெட்டி தயிர் எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த மோரை கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு லேசாக வறுத்து பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த வெந்தயப் பொடியை மோரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.மோரில் இருக்கின்ற குளிர்ச்சி உடல் சூட்டை குறைக்கின்றது.மோரில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
தினமும் மோர் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.மோர் குடிப்பதால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல்,வாயுத் தொல்லை குணமாக மோரில் பெருங்காயத் தூள் சேர்த்து குடிக்கலாம்.
வெயில் காலத்தில் உடலில் நீரிழப்பு குறையாமல் இருக்க மோரில் வெந்தயம் போட்டு சாப்பிடலாம்.மோரில் கற்றாழை ஜெல் கலந்து குடித்தால் அல்சர் புண்கள் குணமாகும்.உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க தினமும் ஒரு கிளாஸ் மோர் சாப்பிடலாம்.