15 நாளில் உங்கள் உடல் எடை குறைய.. தினமும் இந்த மாவில் கஞ்சி செய்து குடிங்க!!

Photo of author

By Divya

15 நாளில் உங்கள் உடல் எடை குறைய.. தினமும் இந்த மாவில் கஞ்சி செய்து குடிங்க!!

Divya

சிறுதானிய உணவான ராகி அதாவது கேழ்வரகு பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த ராகியில் கஞ்சி செய்து குடித்தால் உடல் எடை சீக்கிரமாக குறைந்துவிடும்.ராகியில் கால்சியம்,இரும்பு,நார்ச்சத்து,புரதம் போன்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த ராகியை கொண்டு சுவையான கஞ்சி செய்வது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – ஒரு கப்
2)இந்துப்பு – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் ராகி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.

**பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு ராகியை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்ட வைக்க வேண்டும்.அதன் பிறகு இதை பரப்பி நன்றாக காய வைக்க வேண்டும்.பின்னர் இதனை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

**அதன் பிறகு ராகியை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இதனை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும்.அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த ராகி மாவு மூன்று தேக்கரண்டி போட்டு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.

**பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து கரைத்த ராகியை அதில் ஊற்றி குறைவான தீயில் கஞ்சி காய்ச்ச வேண்டும்.

**பிறகு அதில் சிட்டிகை அளவு இந்துப்பு போட்டு கலந்து காலை நேரத்தில் குடித்தால் உடலில் தேங்கிய தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.

**ராகியில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.உடலுக்கு தேவையான கால்சியம் சத்து,இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் ராகியில் நிறைந்திருக்கிறது.