தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் எம் ஜி ஆர் ஐ தொடர்ந்து விஜயகாந்த அவர்களை தொடர்ந்து தன்னுடைய பெயரையும் அரசியல் பயணத்தில் பதிய வைக்க முயற்சித்து வருகிறார். இது அவருக்கான ஆரம்ப கால வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்பது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் தெளிவாக போகிறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரக்கூடியவர்கள் சினிமாவில் உள்ள ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு ஓட்டுக்களை அள்ளி குவித்து தங்களுடைய தொண்டர்களாக மாறி விடுவார்கள் என நினைப்பது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இப்படித்தான் எம்ஜிஆரில் தொடங்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் டி ராஜேந்தர் சரத்குமார் கமல்ஹாசன் மன்சூர் அலிகான் கர்ணாஸ் நவரச நாயகன் கார்த்திக் மற்றும் விஜயகாந்த் என அனைவரும் அரசியலில் நுழைந்தனர். ஆனால் இதில் அனைவராலும் தங்களுடைய பெயரை நிலைநாட்டிச் செல்ல முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
விஜய் அவர்களுக்கும் தற்பொழுது அப்படித்தான் இருக்கிறது. காரணம், அரசியலில் இவர் நுழைந்ததிலிருந்து எந்த ஒரு கட்சியினரும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக எதிர்த்து குரல் கொடுத்த வருகின்றனர். இவை ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் சினிமாவில் தன்னுடன் பணியாற்றியவர்கள் கூட பகிரங்கமாக நான் இவருக்குத்தான் துணை நிற்பேன் என வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இங்கேயும் அதற்கு மாறாக நடிகர் வடிவேலு கமலஹாசன் என பலரும் விஜய் அவர்களை எதிர்த்தே வருகின்றனர்.
நடிகர் விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மக்களை நேரில் சந்தித்து பேசி இருக்கும் நிலையில் எங்கெல்லாம் அவர் சென்று மக்களை சந்திக்கிறாரோ அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடிகர் கமலஹாசன் அவர்களும் செல்வார் என முடிவு செய்யப்பட்டு அதற்கு அவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் தன் செயலால் பதிலடி கொடுப்பாரா அல்லது மக்களே பதிலடி கொடுக்கட்டும் என பொறுமையோடு காத்திருப்பாரா? தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.