நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியராஜ் அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது தான் நேரில் சென்றதும் அவரை பார்க்க முடியாமல் திரும்பியதும் அதன் பின்பு நிகழ்ந்த சில தருணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார்.
தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து தன்னுடன் 4,5 நபர்களை எம்ஜிஆரை காண்பதற்காக பாக்யராஜ் அவர்கள் அழைப்பு சென்று இருக்கிறார். ஆனால் அவரை எம்ஜிஆர் ஐ காண விடாமல் அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் தான் எம் ஜி ஆர் ஐ பார்க்கவில்லை என்று தமிழக மக்களுக்கு தெரிந்தால் அதிமுகவின் ஆட்சி என்ன ஆகுமோ என்ற பயத்தில் தமிழகத்திற்கு வந்த பாக்கியராஜ் அவர்கள் நான் அவரை பார்த்தேன் அவர் என்னை அமரச் செய்தார் பால் குடித்தார் இவை அனைத்தும் உண்மையில் நிகழ்ந்தது எனச் சொல்லி தனக்கு சமீபத்தில் பிறந்த குழந்தையின் மீது சத்தியம் செய்திருக்கிறார்.
கூட்டம் கலைந்த பின்பு ஒருவன் ஓடி வந்து நீங்கள் உங்கள் குழந்தையின் மீது சத்தியம் செய்து பொய்யை உண்மை என அனைவரையும் நம்ப செய்து விட்டீர்கள் என வாழ்த்து இருக்கிறான். அந்த தருணம் இப்படி பொய் சொல்லி தான் அரசியல் செய்ய வேண்டுமா? என தனக்கு தோன்றியதாகவும் அதனால்தான் அரசியலில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் பாக்யராஜ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
இவை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் ஜெயலலிதா அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பொழுது மீண்டும் பாக்யராஜ் அவர்களை பலரும் அரசியலுக்கு அழைத்துள்ளனர். அப்பொழுது பாக்யராஜ் அவர்களோ நெருப்பை அருகில் சென்று தொட்டாலும் ஆபத்து தூரத்தில் தள்ளி நின்றாலும் அதற்கான கதகதப்பு கிடைக்காது எனவே நான் இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்கிறேன் என தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாத ஜெயலலிதா அம்மா அவர்களை பார்க்கக் கூடியவர்கள் இரண்டு கைகளையும் தூக்கி கும்பிடு போட்டு அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர் வரும்பொழுது தரையில் வீழ்ந்து வணங்குகிறார்கள்.
ஒருவேளை நான் மீண்டும் அரசியலில் இணைகிறேன் என்றால் அனைவரும் ஜெயலலிதா அம்மா அவர்களின் காலில் விழுவார்கள் ஆனால் நானோ கீழே விழாமல் நின்று கொண்டிருப்பேன். இது மிகப்பெரிய பிரச்சனையை வழி வகுக்கக் கூடிய ஒன்றாக அமையும். என்னால் யாருடைய காலிலும் விழவும் முடியாத அதே நேரத்தில் பொய் சொல்லி அரசியல் செய்யவும் முடியாது என விளக்கம் அளித்திருக்கிறார்.