வீட்டை வாடகைக்கு விடக்கூடிய வீட்டு உரிமையாளர்களை குறி வைத்து புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருவதாகவும் இவற்றிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் தப்பிப்பதற்கான வழிமுறைகளையும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வரி துறையினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
முன்பெல்லாம், வாடகை மோசடி என்பது வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, வீட்டை காலி செய்யாமல் ஏமாற்றுவது மற்றும் வீட்டை காலி செய்த பின்பு அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்தாமல் இருப்பது போன்றவை. ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் புதிதாக ஜிஎஸ்டி வரி மோசடிகள் செய்யப்படுகின்றன. அதாவது ஒருவர் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு வீடு தேடி வருவதாகவும் சாதாரண நபர்களைப் போல அவர்கள் 2 மாதங்களுக்கான வீட்டின் வாடகை தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுவதாகவும் அதன் பின் அந்த வீட்டின் முகவரியில் ஜிஎஸ்டி எண்களை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி வாடகைக்கு இருக்கக்கூடிய வீட்டின் முகவரியை பயன்படுத்தி ஜி எஸ் டி எண்களை பெற்றுக்கொண்டு அதில் பல்வேறு விதமான பண மோசடிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இதிலிருந்து வீட்டு உரிமையாளர்கள் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களை தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, வீட்டை வாடகைக்கு உடனிருப்பவர்கள் முதலில் வாடகைதாரிடம் எழுத்துப்பூர்வமாக பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக இந்த முகவரியை பயன்படுத்தி எந்த விதமான ஜி எஸ் டி என்னும் பெறக் கூடாது என்றும் அதில் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடு குடும்பமாக வாழ மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றும் இதில் எந்த விதமான நிறுவனமும் செயல்பட அனுமதி இல்லை என்பதையும் எழுதிப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.