இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!!309 காலிப்பணியிடங்கள்.. ரூ.1,40,000 வரை சம்பளம்!!

மத்திய அரசினுடைய பணிகளின் கீழ் வரக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகி தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம் 137 விமான நிலையங்கள் இருக்கின்றன. இது மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ ஆணையம் என்பதால் தேர்வர்கள் இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளிக்கும் வகையில் தற்பொழுது இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இவற்றில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை கீழே காணலாம்.

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :-

கல்வித் தகுதி – பிஎஸ்சி ( இயற்பியல் , கணிதம் ) , ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங்

பணி விவரம் – ஜூனியர் எக்ஸிக்யூடிவ்

சம்பள விவரம் – 40,000 முதல் 1,40,000 வரை

மொழி விவரம் – ஆங்கிலம் நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருத்தல் அவசியம்

வயதுவரம்பு – 27 வயது, எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 32 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை :-

கணினி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, குரல் பரிசோதனை, மனோவியல் சோதனை/ உளவியல் மதிப்பீடு/ உடல் மருத்துவ பரிசோதனை அடங்கும்.

கட்டண விவரம் :-

பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாய் கொடுத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பெண்கள், எஸ்.டி/ எஸ்.சி/ மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கால அவகாசம் :-

ஏப்ரல் 24 2025

மேலும் தகவல் அறிய :-

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2002-2025-CHQ.pdf