அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

0
14

நாம் உயிர்வாழ உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.நாம் உணவு உட்கொள்ள வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் அளவோடு உட்கொள்ள வேண்டியது முக்கியம்.

பசியின்மை பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை.அதிக பசி இருந்தாலும் பிரச்சனைதான்.உங்களுக்கு தொடர்ச்சியாக பசி எடுத்துக் கொண்டே இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

தொடர் பசி சீரான உணவுமுறை இல்லை என்பதை குறிக்கிறது.எனவே உங்கள் பசியை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

1)நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படுவது கட்டுப்படும்.புரதம் நிறைந்த உணவுகள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

2)சாப்பிடுவதற்கு முன் அதிக தண்ணீர் குடித்தால் பசி உணர்வு குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

3)திட உணவுகளை சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு கட்டுப்படும்.அதேபோல் உணவை மெதுவாக உட்கொண்டால் பசி கட்டுப்படும்.

4)காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.காலை உணவை தவிர்த்தால் பசி அதிகமாகும்.

5)உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.கொழுப்பு நிறைந்த பாலை குடித்தால் பசி கட்டுப்படும்.

6)ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் பசியை கட்டுப்படுத்தலாம்.தினமும் ஒரு உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பசி கட்டுப்படும்.

7)போதிய உறக்கத்தை கடைபிடித்தால் பசி ஏற்படாமல் இருக்கும்.மூன்றுவேளை உணவை பிரித்து ஆறுவேளையாக சாப்பிட்டு வந்தால் பசி கட்டுப்படும்.

8)கார்போஹைட்ரேட் உணவுடன் கொழுப்பு சத்து உணவை உட்கொண்டால் பசி கட்டுப்படும்.

Previous articleஉங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!
Next articleமுருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!