தமிழகத்தில் பல்வேறு குடும்பங்களில் ரேஷன் அட்டை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களை வைத்து குடும்பங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது ரேஷன் கடைகளில் அரிசி துவரம் பருப்பு எண்ணெய் மற்றும் சர்க்கரை அதனோடு கூடவே கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது.
கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இரண்டு கிலோ சிறுதானியங்கள் அதாவது கேழ்வரகு வழங்க இருப்பதாகவும் தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னோட்டம் தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் ரேஷன் அட்டைகளின் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் ரேஷன் அட்டைகளை வைத்து தமிழக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதி என மொத்தமாக 3 நாட்கள் ரேஷன் கடைகள் விடுமுறை விடப்படும் என்றும் பொருட்களை வாங்க நினைக்கும் பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் படியும் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.