சமீப காலமாகவே மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய விவசாய நிலங்களும் வீட்டுமனை நிலங்களாக விற்பனை செய்யப்படுகிறது.
தரிசு நிலங்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பொழுது இருக்கிற கூடிய காலகட்டமானது நிலங்களை அதிக அளவில் வாங்கக்கூடிய மக்களை கொண்டுள்ளது. ஆனால் அதில் தற்பொழுது மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வாங்கக்கூடிய நிலத்திற்கு முதலில் பட்டா முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றில் எது முக்கியம் எவற்றிற்கு என்ன மதிப்பு என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.
நிலத்திற்கு பத்திரம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் பட்சத்தில் நிலத்தை வாங்குபவருக்கு சட்டபூர்வமான ஆவணமாக பத்திரம் பார்க்கப்படுகிறது. இந்த நிலத்தை மற்றொருவருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் எழுத்து வடிவிலான ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் பத்திரம் மட்டுமே இருக்கக்கூடிய நிலம் உள்ளது என்றால் அதை புறம்போக்கு நிலம் என்று கூறி அரசால் எப்பொழுது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ள முடியும்.
ஒருவர் தன்னுடைய நிலத்திற்கு பட்டா மட்டுமே வைத்து இருக்கிறார் என்றால் அதில் பட்டாவினுடைய அனைத்து விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டு இருக்கும். அதாவது நிலத்தினுடைய அளவு நில உரிமையாளரின் பெயர் போன்ற முக்கிய விவரங்கள் பட்டாவில் இடம் பெற்றிருக்கும். பட்டா பெற்றிருக்கக் கூடிய நிலத்தை புறம்போக்கு நிலம் என்று சொல்லி அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கு மாறாக எளிமையாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்து மற்றொருவருக்கு எடுத்துக் கொள்வது எளிதான காரியம்.
பொதுவாக பல நேரங்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம் தன்னுடைய நிலத்தை மற்றொருவர் கையகப்படுத்திக் கொண்டார் என்று அவை பட்டாவின் பெயர் மாறுதல்களால் செய்யப்படக் கூடியவை தான். நிலத்தை வாங்க முடிவு செய்யும் பொழுது பத்திரம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பட்டாவும் முக்கியம். ஒன்று வாங்கி ஒன்று வாங்கவில்லை என்றால் நிலத்தின் முழு உரிமையும் நம்மிடமிருந்து பறிக்கப்படுவதற்கான அபாயங்கள் அதிகம் இருக்கிறது.