மத்திய அரசால் சிறு மற்றும் குறு தொழில் புரிவோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கடன் வகையானது 3 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ,
✓ ஷிஷு – 50,000
✓ கிஷோர் – 50,000 முதல் 5 லட்சம் வரை
✓ தருண் – 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை
தேவையான ஆவணங்கள் :-
✓ ஆதார் அட்டை
✓ பான் கார்டு
✓ வாக்காளர் அடையாள அட்டை
✓ முகவரி சான்று
✓ தொழில் திட்டம்
✓ வங்கி கணக்கு விவரங்கள்
✓ பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
✓ ஜிஎஸ்டி பதிவு
✓ தொழில் பதிவுகள்
விண்ணப்பிக்கும் முறை :-
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ICICI, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் போன்ற வங்கிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க நினைப்பவர்கள் மத்திய அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் பொழுது மேலே கூறப்பட்ட ஆவணங்கள் மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுடைய கடன் தொகையானது உங்களுடைய திட்டத்தை பொருத்தும் அதில் வரக்கூடிய வருமானம் பொருத்தும் அமையும்.