இசை இசை என கூப்பிடும் என் அப்பாவின் குரல் காற்றோடு இசையாக கலந்து விட்டது என கண்ணீர் மல்க காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்களுக்கு போய் வாருங்கள் அப்பா என தமிழிசை சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தையும் மறைந்த எம்பி வசந்தகுமாரின் அண்ணனும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆன குமரி ஆனந்தன் வயது மூப்ப காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இன்று இறைவனடி சேர்ந்தார். இவருடைய வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக அரசியல் இருந்து வெளிவந்த உடல் மீது அக்கறை கொண்டிருந்த நிலையில் அதே வயது மூப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து தமிழசை சௌந்தர்ராஜன் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை… தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று…. பெருமையாக பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்… இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்… குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்… அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து…
இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது…. வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்…
என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்…. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்…
உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்… நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….
என தன் தந்தை தனக்கு கற்றுக் கொடுத்து வளத்ததையும் தன் தந்தையின் இறுதி ஆசையையும் தன்னுடைய வாழ்க்கை பயணமாக எடுத்துக் கொண்டு செல்வேன் என கண்ணீர் மல்க தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தன்னுடைய தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.