கூட்டுறவு சங்கங்களின் மூலம் வேளாண்மை மற்றும் இன்னும் பல செலவுகளுக்காக 1,10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட இருப்பதாகவும் அவை கடன் கேட்டு வருபவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவைகள் விவாத நேரத்தில் பொழுது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பெரிய கருப்பன் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி பதில் நேரத்தில் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட இருக்கக்கூடிய கடன் தொகை மற்றும் அந்த கடன் யாருக்கெல்லாம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களையும் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர் குறிப்பிட்ட விவரம் பின்வருமாறு :-
✓ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் விண்ணப்பித்த உடனே கிடைக்க ஏற்பாடு
✓ நிலம் இல்லாத ஏழை பெண் விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வாங்குவதற்கான கூட்டுறவு சங்கங்களின் கடன் 5 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு
✓ பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய ஏழைப் பெண்கள் 1000 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க 3 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு
✓ கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளை இணைய வழியிலே தொடங்க ஏற்பாடு
✓ இணைய வழி மூலமே கடன் பெற ஏற்பாடு
✓ கூட்டுறவு வங்கிகள் மூலம் கிரடிட் கார்டு வழங்க ஏற்பாடு
✓ விரைவு வணிக முறை மூலமாக கூட்டுறவு பண்டகசாலைகளில் விற்பனையாக்கும் பொருட்களை நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று கொடுக்க ஏற்பாடு
✓ 8 கோடி மதிப்பீட்டில் சென்னை தீவு திடலில் கூட்டுறவு சங்கங்களுக்கான வளாகம் கட்ட ஏற்காடு போன்ற பல முக்கிய செயல்கள் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.