பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை காத்தல் மற்றும் மேலும் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இலங்கை பயணம் மேற்கொண்டார்.
இவர் பயணம் மேற்கொள்ளும் பொழுது தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களால் கைப்பற்றப்பட்ட தமிழக விசைப்படகுகள் போன்றவை விடுவிக்கப்படுவதாகவும் கச்சத்தீவு பகுதிகளில் சிக்கிய படகுகள் மட்டும் நடுக்கடலில் மூழ்கடிக்கப்படுவதாவும் இலங்கை அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதற்கு முன்பே அறிவித்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு சென்று அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் என அனைத்தும் முடிவடைந்து மீண்டும் இந்தியா திரும்பிய நிலையில், இதுவரை இலங்கை சார்ந்த தெரிவிக்கப்பட்டது போல மீனவர்கள் மற்றும் படகுகள் முழுமையாக தமிழகத்திற்கு அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜ் கூறியிருப்பதாவது :-
அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கடைசியாக எங்களை சந்தித்த பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு சென்ற பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது கட்டாயமாக மீனவர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்றும் அதன் பின்பு இலங்கை மீனவர்களால் மற்றும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்காது என நம்பிக்கை அளிப்பதாகவும் ஆனால் ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் இலங்கையில் செல்வதற்கு முன் இவர்கள் கூறியது அனைத்தும் வெறும் கண்துடைப்பிற்கே என்று கோபமாக தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு எந்த நன்மையும் இவர்கள் யோசிக்கவில்லை என்றும் இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் குறித்து பேசியதாக வெளியான தகவல்கள் கூட வெறும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்டவையே என தெரிவித்துள்ளார்.