தமிழகத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கான எளிமையான மற்றும் சிறந்த திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதுவரை நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த ஒற்றை சாளர அனுமதி முறை தளம் மற்றும் ஓர் அடுக்கிற்கான எளிமையான அனுமதிகளை பெற உதவியாக இருந்தது. தற்பொழுது இதனை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினை தமிழக அரசு முன்னெடுத்து இருக்கிறது. அதன்படி, தூண்கள் மற்றும் இரண்டு அடுக்கு தலங்களுக்கான சுய விவரங்கள் சான்றிதழ் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், சுய சான்றிதழ் மற்றும் ஒற்றை சாளர அனுமதி இவை இரண்டும் புதிய வீடுகளை கட்டுவதற்கான அனுமதியை எளிமையாக வாங்க உதவுவதாக அமைந்துள்ளன. இவற்றில் தான் தற்பொழுது இரண்டு தளங்களை அமைப்பதற்கான சுயசான்றிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே வீடு கட்டியவர்கள் தங்களுடைய வீடுகளை விரிவாக்கம் செய்ய நினைத்தாலோ அல்லது புதிய வீடுகள் கட்ட நினை ப்பவர் தூண்கள் மற்றும் இரண்டு தளங்களை அமைக்க நினைப்பவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள் கூட தரமான வீடுகளை கட்ட முடியும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.