அரசு விழாவிற்காக PHC மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களிடம் பணம் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டதாகவும் குலதெய்வ கோவில்களுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு தங்களுடைய நிலை மோசமாகிவிட்டதாகவும் மருத்துவர் ஒருவர் புலம்பும் ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
தென்காசியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசி இருக்கக்கூடிய ஆடியோவில் தெரிவித்து இருப்பதாவது :-
தென்காசியில் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் இடம் பணம் கேட்கப்பட்டுள்ளது. அதிலும் ஒருவரிடம் 10,000 ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
இதுபோன்ற அரசு விழாக்களுக்கு எல்லாம் மருத்துவர்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றால் எங்கே செல்வது என்றும் மன உளைச்சலோடு தான் வேலை பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது என்றும் எதற்காக BMO – Block Medical Officer ஆக படித்து வந்துள்ளோம் என்றும் புலம்பி கொட்டியுள்ளார். அமைச்சர் நிகழ்ச்சிக்காக வருகிறார் என்றால் அரசினுடைய பணத்தில் மேடை அமைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு லோ அமைச்சர் நிகழ்ச்சிக்காக வருகிறார் என்றால் அரசினுடைய பணத்தில் மேடை அமைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு மாறாக அரசு நிகழ்ச்சிக்கு நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்பது போல கேள்விகளையும் அந்த மருத்துவர் எழுப்பியுள்ளார்.
முன்பெல்லாம் இது போன்ற அரசு நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 5000 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 10,000 ரூபாய் வசூல் செய்ய துவங்கியிருப்பதாகவும் எடுத்துக் கொடுப்பதற்கு எங்கே பணம் இருக்கிறது என்றும் கேட்டிருக்கிறார். தங்களை பணம் கொடுக்க வேண்டும் என சொல்வதைத் தாண்டி பிறரிடமும் சென்று வசூலித்து வர சொல்வது மிகவும் மோசமான ஒன்றாக இருப்பதாகவும் அப்படியே ஒருவரிடம் சென்று வசூலிக்க பார்த்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித காரணங்களை கூறுவதாகவும் புலம்பி இருக்கிறார்.
இவை ஒருபுறம் இருக்க வருடம் முழுவதும் சேவை மற்றும் பணி செய்து வரக்கூடிய தங்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்காமல் அந்நாளில் கூட அமைச்சர் வருகிறார் என வேலைகளை வாங்குவதாகவும் குடும்பத்தில் உள்ள அனைவரும் இன்று ஒரு நாள் ஆவது குலதெய்வ கோவிலுக்கு வரலாம் அல்லவா என்பது போல அழைத்துக் கொண்டே இருப்பதாகவும் மருத்துவராக இருப்பதில் நிம்மதியே இல்லை என்றும் அந்த ஆடியோவில் பேசிய மருத்துவர் தெரிவித்துள்ளார்.